கலம்
kalam
n. 1. [K. kala, M. kalam, Tu.kara.] Vessel; hollow utensil, as a cup;plate, whether of earth or metal; earthenware;பாத்திரம். பொற்கலத்
தூட்டி (நாலடி, 345). 2. Bottle-shaped vessel;
குப்பி யவனர் நன்கலந் தந்த . .
தேறல் (புறநா. 56, 18). 3. [T. kalamu, M. kalam.]Ship, boat;
மரக்கலம் கலங்கவிழ் மாக்களை (மணி.16, 120). 4. The 27th nakṣatra. See
இரேவதி பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை). 5. Jewel;ornament;
ஆபரணம் நன்கலம் பரிசின்மாக்கட்கு. . . நல்கி (புறநா. 6, 15). 6. Lute;
யாழ் கலத்தொடுபுணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப். 7, 24). 7. Plough;உழபடை. (சூடா.) 8. Weapon;
ஆயுதம் கையினுங்கலத்தினு மெய்யுறத் தீண்டி (பட்டினப். 70). 9. Document written on palm-leaf; ஓலைப்பத்திரம். (தொல்.சொல். 81,
உரை ) 10. A measure of capacity
ஒரு முகத்தலளவு (தொல். எழுத். 168.)
கலம்
kalam
n. E. Column, a narrowdivision of a sheet, page, etc.;
பந்தி 20-ஆம் பக்கத்து 2-ஆம்
கலம் பார்க்க
கலம்
šakalam
n. šakala. Piece,fragment. See சகலம்².
கலம்
kalam
n. cf. கலன். Encumbrance;வில்லங்கம். நிலத்துக்கு எப்பேர்ப்பட்ட கலமும்இறையுமில்லை (S. I. I. vii, 278).