மாற்றம்
māṟṟam
n. மாறு-. [T. māṭa,K. māṭu, M. māṭṭam.] 1. Word; வார்த்தை. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள், 689). 2.Answer, reply; விடை. மாறுதலைக்கடாஅ மாற்றமும் (தொல். பொ. 659). 3. Word of challenge;vow; வஞ்சினமொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறநா. 341). 4. Diversity; மாறுபட்டநிலை.மாற்றமாம் வையகத்தன் (திருவாச. 1, 81). 5.Hatred; enmity; பகை. மாறுகொ ளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3). 6. Remedy;பரிகாரம். (W.)
மாற்றம்
māṟṟam
n. மாறு-. Debate;வாதம். மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந்தாவெனச்சொன்னாள் (நீலகேசி, 169).