மிடறு
miṭaṟu
n. perh. மிழறு-. [M.miḍaru.] 1. Neck; கழுத்து. கறைமிட றணியலுமணிந்தன்று (புறநா. 1). 2. Trachea, windpipe;ஒலியெழும் கண்டவுறுப்பு. தலையினு மிடற்றினுநெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83). 3. Throat;தொண்டை. மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6). 4. (Mus.)See மிடற்றுக்கருவி. நரம்பு நம்பியூழ் மணிமிடறுமொன்றாய் (சீவக. 728). 5. Lower jaw; கீழ்வாய்.(W.) 6. Draught, a quantity of liquid takenat one swallow; ஒருவாய் கொண்ட திரவப்பண்டம்.