முக்கால்
mu-k-kāl
n. மூன்று + கால்¹.1. The fraction ¾, as three-quarters; என்றகுறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமானபின்னவெண். 2. A kind of metre; ஒருவகைச்சந்தம். திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு).
முக்கால்
mu-k-kāl
n. id. + கால்&sup4;. 1.Three times; மும்முறை. ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87). 2. A third time;மூன்றாவது முறை. முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் (கம்பரா. மாரீச. 212). 3. See முக்காலம், 1.