மைந்தன்
maintaṉ
n. மைந்து. [M.maindan.] 1. Son; மகன். (பிங்.) குலக்கோமைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76). 2. Youngman; இளைஞன். (பிங்.) மைந்த . . . நீ யிதற்கென்னை வெகுண்டது (கம்பரா. நகர்நீங். 134). 3.Young of an animal or reptile; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி. அரவமூத்த மைந்தன் (பரிபா. 19,73). 4. Disciple, pupil; மாணாக்கன். அளவிலாமைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4). 5. Man;ஆண்மகன். (பிங்.) 6. Strong, powerful man;திண்ணியன். (சூடா.) 7. Warrior, hero; வீரன்.தொடுகழன் மைந்தர் தொழில் (பு. வெ. 3, 6). 8.Husband; கணவன். மைந்த ரகலத்தகலா . . . நன்னர்ப் புணர்ச்சியும் (பரிபா. 8, 43).