மையல்
maiyal
n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.)