மொய்
moy
n. மொய்¹-. 1. Press,throng, swarm; நெருக்கம். மொய்கொண் மாக்கள்(மணி. 19, 136). 2. Company, assembly, crowd;கூட்டம். (பிங்.) 3. Closeness, tightness; இறுகுகை. மொய்வளம் பூத்த முயக்கம் (பரிபா. 18, 18).4. Greatness, excellence; பெருமை. மொய்சிதைக்கு மொற்றுமை யின்மை (நான்மணி. 23). 5.Strength; வலிமை. மொய்வளஞ் செருக்கி (பதிற்றுப். 49, 8). (பிங்.) 6. Battle, war; போர்.மொய்தாங்கிய முழுவலித் தோள் (பு. வெ. 8, 28,கொளு). (சூடா.) 7. Battle-field; போர்க்களம்.(பிங்.) மொய்த் தலைதனில் . . . முடுகினனே (இரகு.திக்கு. 87). 8. Enemy; enmity; பகை. மொய்யிரிய(பு. வெ. 3, 5). 9. Elephant; யானை. (பிங்.) 10.Bee; வண்டு. (சூடா.)
மொய்
moy
n. cf. மோய். Mother; தாய்.(அக. நி.)
மொய்
moy
n. cf. மொயின். 1. [K. muy.]Presents given cn special occasions, as at awedding; விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப்பணம். Colloq. 2. Contribution, as toa charity; மகமை. Loc.
மொய்
moy
n. 1. Beauty; அழகு. மொய்யகலத்துள் ளிருப்பாள் (திவ். திருநெடுந். 19). 2.Country fig; அத்தி. (சங். அக.)