யூகம்
yūkam
n. ஊகம்¹. 1. Blackmonkey; கருங்குரங்கு. யூகமொடு மாமுக முசுக்கலை(திருமுரு. 302). (பிங்.) 2. Female monkey;பெண்குரங்கு. (திவா.)
யூகம்
yūkam
n. ūhanī. Broomstickgrass. See ஊகம்¹, 3. (அக. நி.)
யூகம்
yūkam
n. yūka. Louse; பேன்.(யாழ். அக.)
யூகம்
yūkam
n. ūha. 1. Guess, conjecture; உத்தேசம். 2. Discrimination, keenperception, understanding; விவேகம். (யாழ். அக.)3. Intent, import; கருத்து. 5. Brilliance;காந்தி. (யாழ். அக.) 4. Reason, logic; தருக்கம்.
யூகம்
yūkam
n. vyūha. 1. Arrangement or disposition of the forces for fighting,military array; படையின் அணிவகுப்பு. சக்கரயூகம் புக்கு (கம்பரா. நிகும்பலை. 69). 2. Army,host; படை. (சூடா.) 3. Headless trunk of abody; உடற்குறை. (பிங்.)
யூகம்
yūkam
n. cf. ulūka. Rock hornedowl; கோட்டான். (பிங்.)