வலம்புரி
valam-puri
n. id. +. [T.valamuri, M. valambiri.] 1. That whichcurls to the right; வலமாகச் சுழிந்திருப்பது. வலம்புரி யாழியனை (திவ். பெரியதி. 9, 9, 9). 2. Seeவலம்புரிச்சங்கு. திருமுத் தீன்ற வலம்புரிபோல்(சீவக. 2702). 3. Lines in the palm of the handresembling valampuri-c-caṅku, consideredauspicious; வலம்புரிச்சங்குபோன்று கையிலுள்ளஇரேகை. வலம்புரி பொறித்த வண்கை மதவலி(சீவக. 204). 4. A head-ornament, shapedlike valampuri-c-caṅku; வலம்புரிச்சங்கின் வடிவமைந்த தலைக்கோலவகை. உத்தியொடு . . . வலம்புரி வயின்வைத்து (திருமுரு. 23). 5. East Indianrosebay. See நந்தியாவட்டம். (பிங்.) பாரிசாதமென் கொழுந்தொடு வலம்புரி பலவும் (உபதேசகா.சிவபுண். 307). 6. Indian screw-tree, l. sh.,Helicteres isora; நீண்ட செடிவகை. (சூடா.) 7.(Nāṭya.) A gesture with one hand in which thelittle finger and the thumb are held uprightwhile the forefinger is folded and the othertwo fingers are held up slightly bent, one of33 iṇaiyā-viṉaikkai, q.v.; சிறுவிரலும்