வாளம்
vāḷam
n. வாள்¹. Sword;வாள். கையொடு புகர்வாளமும் . . . விழ (பாரத.பதின்மூன். 113).
வாளம்
vāḷam
n. prob. vyāla. A mythical animal. See யாளி. (நாமதீப. 199.)
வாளம்
vāḷam
n. vāla. 1. Circle;வட்டம். வாளமாகவோர் பவளமால்வரை . . . வளைந்தென்ன (பாரத. காண்டவ. 11). 2. A mythicalrange of mountains. See சக்கரவாளம், 1. (யாழ்.அக.) 3. The cakra bird. See சக்கரவாகம், 1.மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம் (கம்பரா. பம்பை. 21).
வாளம்
vāḷam
n. நேர்வாளம். Croton.See நேர்வாளம்.