விலாசம்
vilācam
n. vi-lāsa. 1. Sport,play, pastime, pleasure, diversion; விளையாட்டு.வீதியில் விலாச முற்றிடு நாளில் (பாரத. சம்பவ. 119).2. Amorous act or gesture; coquetry; காமக்குறிப்போடு கூடிய செய்கை. 3. Bashfulness; கூச்சம்.(W.) 4. Beauty; அழகு. (W.) 5. Dramaticcomposition; நாடகநூல். அரிச்சந்திர விலாசம்,டம்பாசாரி விலாசம். 6. Pleasure-house; retreat;சுகானுபவத்துக்குரிய இடம். 7. Address, superscription; கடிதம் பெற்றுக்கொள்பவரின் பெயர்இருப்பிடம் முதலிய குறிப்பு. 8. Abbreviatedname, as of a firm or individual; கூட்டுவியாபாரக்கடை அல்லது தனிநபரின் பெயரை யுணர்த்துங்குறியீடு. 9. Trade mark, property mark; ஆடைமுதலியவற்றில் இடும் வியாபாரக்குறி. இந்தச்சேலையிற் குத்தியிருக்கும் விலாசமென்ன ? 10.Secret code-word or sign marked on articlesby traders to indicate the price; வியாபாரிகளால்பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு.
விலாசம்
vilācam
n. prob. višāla. 1.Spaciousness, extension, width; விசாலம். விலாசமான வீடு. 2. Plantain; வாழை. (அரு. நி.) 3.See நீபம்¹, 1, 2, 3, 4. (அரு. நி.).