வேதி
vēti
n. vēdin. 1. One whoknows; அறிந்தவன். வேதிபோற்றி விமலாபோற்றி(திருவாச. 4, 106). 2. Brahmā; பிரமன். (அரு.நி.) 3. Learned person; பண்டிதன். (இலக். அக.)
வேதி
vēti
n. vēdi. 1. Low platformwithin a house, for sacrifices, weddings, etc.;மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை. மைந்தனைச் செம்பொன்வேதி யெறிக்குங் கிரணமணிப்பீடம தேற்றினாரே (பாரத. திரெள. 91). 2. Seeவேதிகை¹, 1. கீதசாலை வேதிநிறைய (பெருங். உஞ்சைக். 34, 224). 3. Outer wall of a fortification;compound wall; மதில். (சூடா.) 4. Seeவேதிகை¹, 3. பாத்திரவேதி, திருமஞ்சனவேதி. 5.Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.) 6. The 18thnakṣatra. See கேட்டை¹, 1. (பிங்.)
வேதி
vēti
n. வேதி³-. Transmuting;தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை. குளிகைகொடு பரிசித்து வேதி செய்து (தாயு. சின்மயா. 7).
வேதி
vēti
n. வேதி-. Weapon; ஆயுதம்.பந்தமொடு பல்வகைய வேதிகள் பரித்து (இரக்ஷணிய.பக். 44).