வேய்-தல்
vēy-
4 v. tr. 1. To cover, as abuilding; to roof, thatch; மூடுதல். பிறங்கழல்வேய்ந்தன (பு. வெ. 3, 22). 2. To put on, as agarland; to wear, as crown; சூடுதல். புதன்மானப்பூவேய்ந்து (மதுரைக். 568). நுமர்வேய்ந்த கண்ணியோடு (கலித். 83). 3. To surround; சூழ்தல்.மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769). 4. Toset, as gems; பதித்தல். வேய்ந்த மாமணிக் கவசமும்(பாரத. காண்டவ. 8). 5. To be fitted with;பொருந்துதல். கார்மலர் வேய்ந்த . . . பரப்பாக (கலித்.98). 6. To bore; துளைபோடுதல். (அக. நி.)--intr. To open, blossom; மலர்தல். (கல்லா. 20, 5,உரை.)