பள்ளி
paḷḷi
n. palli. [K. paḷḷi.] 1.Place; இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும்(தொல். எழுத். 100). 2. Hamlet, small village;சிற்றூர். (பிங்.) 3. Herdsmen's village; இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). 4. Town;நகரம். (பிங்.) 5. Hermitage, cell of a recluse;முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் (மணி. 18, 8). 6. Temple, place of worship,especially of Jains and Buddhists; சைன பௌத்தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை(திவ். பெரியதி. 2, 1, 5). 7. Palace; anythingbelonging to royalty; அரசருக்குரிய அரண்மனைமுதலியன. பள்ளித்தேவாரம். 8. Workshop;வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15).9. Sleeping place or bed; மக்கட்படுக்கை. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840). 10.Sleep; தூக்கம். (கலித். 121.) 11. Sleeping placeof animals; விலங்குதுயிலிடம். (பிங்.). 12. School;பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்(திவ். பெரியதி. 2, 3, 8). 13. Room, chamber;அறை. (அக. நி.) 14. Alms-house; அறச்சாலை.
பள்ளி
paḷḷi
n. [M. paḷḷi.] Christianchurch; கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற்பள்ளி.