இசைதல்
icai-
4 v. intr. இயை¹. 1. Tofit in, as one plank with another in joining;பொருந்துதல். 2. To harmonise; to conform,as time-measure and melody; ஒத்துச்சேர்தல்
தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது.. 3. To consent,acquiesce, agree;
உடன்படுதல் விண்பெறினு மிசையார் கொலைபொய் (திருநூற். 83). 4. To acquireor get possession of;
கிடைத்தல் ஈண்டு கனகமிசையப் பெறாஅது (திருவாச. 2, 39). 5. To bepossible; to be within one's power;
இயலுதல் இசையா வொருபொரு ளில்லென்றல் (நாலடி. 111).