ஒதுக்கம்
otukkam
n. ஒதுங்கு-. 1.Retreat; privacy; seclusion; solitude;
ஏகாந்தம் 2. Walk, gait;
நடை ஊழடி யொதுக்கத் துறுநோய்(சிலப். 10, 92). 3. Crouching, stooping; பதுங்குகை. (
W.) 4. Retiring, receding, retreating,withdrawing; பின்னிடுகை. (
W.) 5. Abode,habitation, dwelling place;
இருப்பிடம் திணியிமிலேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின் னிணைமலர்ச் சேவடிகொடுத்த (சீவக. 3100). 6. Hiding place;
மறைவிடம் (சூடா.) 7. Catamenia; மகளிர்பூப்பு. (
W.)8. Rest-house;
சாவடி 9. A defective note inmusic;
ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 14, அரும்.)
ஒதுக்கம்
otukkam
n. ஒதுங்கு-. (யாழ்.அக.) 1. Humility; தாழ்மை. 2. Conduct;ஒழுக்கம்.