பாகம்
pākam
n. pāka. 1. Cooking,dressing food; சமையல். 2. Heating; தகிக்கை.பாகமொடு விரகம் (வேதா. சூ. 77). 3. Ripeness,maturity; பக்குவம். இப்பழம் நல்ல பாகத்திலிருக்கிறது. 4. (Poet.) Style of poetry, three innumber, viz., tirāṭcā-pākam, katalī-pākam,nāri-kēḷa-pākam; திராட்சாபாகம், கதலீபாகம்,நாரிகேளபாகம் என்ற மூவகைச் செய்யுள் நடை.பாகத்தினாற் கவிதை பாடிப் படிக்கவோ (தாயு.சச்சிதா. 3). 5. State of mind; மனநிலை.குறிப்பின்றியும் பாகமுணர்வான் குறிப்புப் பெற்றுழிமிகவுணரும் (தொல். பொ. 127. உரை).
பாகம்
pākam
n. bhāga. 1. Sharing,dividing; பகுக்கை. (சூடா.) 2. Share, part,portion; கூறு. தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பன்று (திருவாச. 5, 37). 3. Half, moiety;பாதி. (சூடா.) 4. (Math.) Degree; பாகை. 5.Side, place; பக்கம். பாகம் பெண்ணோடாயின பரிசும்(திருவாச. 2, 78). 6. Injury; பங்கம். பாகத்தைப்படாத நெஞ்சின் (சீவக. 2278, உரை). 7. Alms,charity; பிச்சை. (பிங்.) 8. cf. vāhika. A kindof drum; பறைவகை. (சிலப். 3, 27, உரை.)
பாகம்
pākam
n. bāha. 1. Arm; புயம்.(W.) 2. Measure of the arms extended = 4cubits; நான்கு முழுங்கொண்ட கைந்நீட்டளவு. (அக.நி.)
பாகம்
pākam
n. bhāga. Place, spot,region; இடம். கன்னபாகமும் (பாரத. புட்ப. 33).