பாலம்
pālam
n. 1. cf. pāl. Earth; பூமி.(பிங்.) பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222). 2. Branch of a tree; மரக்கொம்பு.(W.) 3. Cuscus plant; வெட்டிவேர். (நாமதீப. 327.)
பாலம்
pālam
n. bhāla. Forehead;நெற்றி. (பிங்.) தீவிழிப் பாலமும் (விநாயகபு. 11, 11).
பாலம்
pālam
n. bhiṇḍi-pāla. A weapon; மழு. (திவா.)
பாலம்
pālam
n. U. pāla. 1. Bridge;வாராவதி. நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா. கிஷ். 12). 2. Dam, embankment, projecting wharf, jetty; நீரின் அணைச்சுவர்.(W.)