பெருமிதம்
peru-mitam
n. id. +. 1.Maximum limit; பேரெல்லை. (தொல். பொ. 257,உரை.) 2. Greatness; மேம்பாடு. பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431). 3. Pride, arrogance;தருக்கு. பெருமை பெருமித மின்மை (குறள், 979).4. Joy; உள்ளக்களிப்பு. (திவா.) 5. Consciousness of one's greatness, one of eight mey-p-pāṭu,q.v.; எண்வகை மெய்ப்பாடுகளுள் கல்விமுதலியபெருமைகளில் மேம்படுகை. கல்வி தறுக ணிசைமைகொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே(தொல். பொ. 257).
பெருமிழலைக்குறும்பநாயனார் peru-miḻalai-k-kuṟumpanāyaṉār, n. A canonizedŠaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள்ஒருவர். (பெரியபு.)