மயல்
mayal
n. id. [T. mayala, K.mayamu, M. mayyal.] 1. Confusion; bewilderment; delusion; மயக்கம். மயலிலங்குந் துயர் (தேவா.121, 2). 2. Madness; பைத்தியம். மயற்பெருங்காதலென்பேதைக்கு (திவ். திருவாய். 4, 4, 10). 3. Desire;ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற (கல்லா.20, 6). 4. Lust, sensual infatuation; காமவிச்சை.மாதர் மயலுறுவார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந்.203). 5. Māyā; மாயை. மயலாரும் யானுமறியேம்(கம்பரா. நாகபா. 258). 6. Doubt; சந்தேகம். மயலறு சீர்த்தி (பு. வெ. 9, 7). 7. Fear, dread; பயம்.(யாழ். அக.) 8. Dried leaves, rubbish; செத்தை.வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128).9. Fire; நெருப்பு. (அரு. நி.) 10. Slowness;மந்தம். (யாழ். அக.) 11. Demon; imp; பிசாசம்.(பிங்.)