மருத்துவன்
maruttuvaṉ
n. id.Physician; வைத்தியன். மருத்துவனாய்நின்ற மாமணிவண்ணா (திவ். பெரியாழ். 5, 3, 6).
மருத்துவன்
maruttuvaṉ
n. See மருத்துவான். (பிங்.) மருத்துவன்றனைச் சசியொடு துரந்து(கந்தபு. அவைபுகு. 98).
மருத்துவன்றாமோதரனார் maruttuvaṉ-ṟāmōtaraṉār, n. மருத்துவன்¹ +. A poet ofthe Third Šaṅgam; கடைச்சங்கப்புலவருள் ஒருவர்.(புறநா.)