மலிவு
malivu
n. மலி-. 1. Abundance;மிகுதி. 2. Fullness; நிறைவு. (பிங்.) மனைவேள்விமலிவுரைத்தன்று (பு. வெ. 9, 27). 3. (Akap.)Happiness of lovers in sexual union; காதலரின்புணர்ச்சியுவகை. மலிவும் புலவியும் (தொல். பொ.500). 4. Cheerfulness; உவகை. மலிவுடை யுள்ளத்தான் (பரிபா. 19, 88). 5. Cheapness; நயவிலை.மலிவுகுறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83).6. Nature, characteristics; தன்மை. முயக்கம்வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று (பு. வெ.9, 46, கொளு). 7. That which is best; உத்தமம்.இம்முப்பாலும், மாமலிவுடனே மற்ற மெலிவொடுசமனுமாமே (சூடா. 12, 10).