மாந்தர்
māntar
n. 1. Human beings;மக்கள். மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல்.சொல். 163). 2. Male persons; ஆடவர். தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13). 3.Watchmen; ஊர்காவலர். நல்லிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல் (கலித். 142, 33).
மாந்தரஞ்சேரலிரும்பொறை mānta-rañ-cēral-irumpoṟai, n. மாந்தரன் +. A Chēraking; ஒரு சேர அரசன். (புறநா. 53, 125.)