மிகை
mikai
n. id. [K. mige.] 1.Abundance, excess; மிகுதி. மிகைநாடி (குறள்,504). 2. Excellent thing; சிறந்தபொருள். மிகையிரண்டுள (இரகு. நகரப். 5). 3. Excellence;மேன்மை. காரியங்கள் மிகை படர்ந்து (விநாயகபு.நைமி. 25). 4. Greatness; பெருமை. மிகைமக்களால் (நாலடி, 163). 5. That which is unnecessary, superfluous; அனாவசியமானது. யான்மிகையோ (கம்பரா. சூர்ப். 139). 6. (Log.) Super-fluity; redundancy, a defect in argumentation;வேண்டு மளவின் மிக்கதென்னுங் குற்றம். முதற்கடவு ளொருவனே யமையுமாகலின் வேறும் அத்தன்மைய ருண்டெனின் மிகையென்னுங் குற்றமாம் (சி.போ. பா. 1, 3, பக். 52, சுவாமிநா.). 7. That whichremains or is left over, remainder; மிஞ்சுபொருள். (உரி. நி.) 8. Extra; அதிகப்படியானது.மிகைக்கை காணாது (பெருங். உஞ்சைக். 43, 149).உழைக்கோர் புள்ளி மிகையன்று (திவ். பெரியாழ். 5,1, 2.) 9. Arrogance; செருக்கு. மிகை நடுக்கெனா(தொல். பொ. 260). 10. Evil deed; தீச்செயல்.மிகைபல செய்தேன் (தேவா. 1115, 6). 11. Fault,defect, error; தவறு. மிகை சீறுபு (சீவ