வம்பு
vampu
n. 1. Newness, novelty;புதுமை. வம்பப் பதுக்கை (புறநா. 3). (பிங்.) 2.Instability; நிலையின்மை. (தொல். சொல். 327.) 3.Uselessness; worthlessness; பயனிலாமை. வம்புபழுத்து (திருவாச. 40, 6). 4. Idle talk; gossip;வீண்வார்த்தை. Colloq. 5. Scandal; பழிமொழி.ஊரார் புகல் வம்பே (வெங்கைக்க. 18). 6. Evilword; தீம்பு வார்த்தை. (W.) வெறிதே வம்புரைத்தனை (கந்தபு. சூரன்வதை. 157). 7. Falsity; படிறு.(பிங்.) 8. Base conduct; சிற்றொழுக்கம். (நாமதீப.650.) 9. Indecent language; அசப்பியம். (யாழ்.அக.) 10. Deceit; வஞ்சனை. (பிங்.) 11. Wantonact; dalliance; சரசச்செயல். (W.) அவளோடுவம்பு பண்ணினான். 12. Quarrel; சண்டை.அவன் ஒருவரோடும் வம்புக்குப் போகிறதில்லை. 13.See வம்பமாரி. வம்பார் சிலம்பா (திருக்கோ. 159).14. See வம்புக்காய். 15. See வம்புப்பிள்ளை. (J.)16. Comparison, similitude; உவமை. வம்பிறுசிவனிடத்து (ஞானா. 68, 12). 17. Fragrance;வாசனை. வம்பறா வரிவண்டு (தேவா. 737, 5). (பிங்.)/
வம்பு
vampu
n. vambha. [T. vampu,O. K. bambu.] 1. Curved bamboo-pole of apalanquin; சிவிகையின் வளைகொம்பு. Loc. 2.See வம்புமரம். வம்பிலேகட்டி யடித்தார்கள். 3.Thill. See ஏர்க்கால்.