விரி-த்தல்
viri-
11 v. tr. Caus. of விரி¹-.1. To cause to expand; to open, unfold;விரியச்செய்தல். 2. To expound; to elaborate,as in writing or in speaking; விளக்கி யுரைத்தல்.நூல் விரித்துக் காட்டினும் (நாலடி, 341). 3. Toextend; to spread; பரப்புதல். பல்கதிர் விரித்தே(புறநா. 8). விரித்த நாணல் (கம்பரா. கங்கை. 50).4. To untie, loosen, as the tresses of a woman;கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழ விடுதல்.விரித்த கருங்குழலும் (சிலப். 20, வெண்பா, 3).