விலக்கு
vilakku
n. விலக்கு-. 1. Prohibition, injunction not to do a thing, dist. fr. viti;வேண்டாததென்று ஒதுக்குகை. பிறனில் வேட்கையின்னன விலக்கதாமே (பிரபோத. 39, 16). 2. Seclusion; தனி. அவன் யாரோடுஞ் சேராது விலக்காயிருக்கிறான். 3. Rule of exception; சிறப்புவிதி. இந்தச்சூத்திரத்திற்கு விலக்கென்ன ? 4. Hindrance,obstruction; தடை. 5. See விலக்குக்கருமம். விலக்கொடு பிராயச்சித்த மெனவைந்து வினைகள் (பிரபோத. 39, 13). 6. Activity of a warrior inwarding off arrows aimed at him, one ofpañca-kiruttiyam, q.v.; பஞ்சகிருத்தியங்களுள்வீரன் தன்மேல்வரும் அம்புகளைத் தடுக்கை. (சீவக.1676, உரை.) 7. Menses; மாதவிடாய். 8. Error,fault; வழு. (W.) 9. (Rhet.) See விலக்கணி.(தண்டி. 45, உரை.)