வேற்றுமை
vēṟṟumai
n. id. 1.Difference; வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந்திருவர் நட்டக்கால் (நாலடி, 75). 2. Antipathy;விரோதம். காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டுபொருள்வயிற் போகுவாய் (கலித். 12). 3. Dissi-milarity; disagreement; ஒப்புமையின்மை. 4.Characteristic mark distinguishing an individual or species; ஒரு பொருளின் வேறுபாடுகாட்டற்குரிய தன்மை. 5. (Gram.) Case; செயப்படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளைவேறுபடுத்துவது. (தொல். சொல். 62.) 6. (Gram.)See வேற்றுமையுருபு. (நன். 420.) 7. (Gram.) Seeவேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.) 8. (Rhet.) Seeவேற்றுமையணி. (தண்டி. 49.)