அசைவு
acaivu
n. அசை¹-. 1. Shaking,moving about, swinging;
சலனம் தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா. 13). 2. Weariness, faintness, exhaustion;
தளர்வு (சீவக. 1185.)3. Laziness, sloth;
சோம்பு ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371). 4. Suffering caused by lossof position; முன்னிலைமை
கெட்டு வருந்தும்
வருத்தம் இளிவே யிழவே யசைவே (தொல்.
பொ 253). 5.Defeat;
தோல்வி அசைவில படையருள் புரிதருமவன் (தேவா. 568, 6).
அசைவு
acaivu
n. அசை-. 1. Slip,failure; தப்பு. அசைவிலரெழுந்து (மதுரைக். 650).2. Eating; உண்கை. நஞ்சினை யசைவுசெய்தவன்(தேவா. 581, 3). 3. End; முடிவு. (சம். அக. Ms.)