தூதன்
tūtaṉ
n. dūta. 1. Messenger,news-carrier; செய்தியறிவிப்பவன். வாலிதன்மகனவன்றன் றூதன் வந்தனென் (கம்பரா. பிணிவீட்டு.82). 2. Ambassador, envoy; அரசதூதன். நன்றுகொ லென்னலோடும்
நாயகன் றூதனக்கான் (கம்பரா.பிணிவீட்டு. 83). 3. Agent, servant; ஏவலாளன்.வெய்யகாலன் மாதூதர் மனங்களிக்க (பாரத. கிருட்டிண. 10). 4. Spy, emissary, secret agent;ஒற்றன். Colloq. 5. Negotiator, one who treatsfor another in love-intrigues; காமக்கூட்டத்துக்காதலரை இணக்குவோன் Colloq. அடியேற்கெளிவந்த தூதனை (தேவா. 549, 8). 6. Angel;
தேவதூதன் Chr. 7. Mercury;
புதன் (பிங்.) 8. Onewho reports to the magician the details ofpoisonous bites; பாம்புகடித்த செய்தியை மாந்திரிகனுக்கு அறிவிப்பவன். (
W.)