உயிர்ப்பு
uyirppu
n. உயிர்-. 1. Reanimation, resurrection; உயிர்த்தெழுகை. 2. Revival;சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை. 3. Breath,respiration;
சுவாசம் ஊனி லுயிர்ப்பை யொடுக்கி(தேவா. 1173, 3). 4. Invocation to a deity tocome and abide in an idol; விக்கிரகத்தினுள் தெய்வசத்தியை வருவிக்கை. Loc. 5. Wind, air;
காற்று ஒல்லென வீழ்வுறு முயிர்ப்பின்
காவலன் (கந்தபு. திருவவ.13). 6. Sighing;
மூச்சு நெட்டுயிர்ப்போடுற்றபிணம்(நீதிநெறி. 31). 7. Sweet fragrance;
சுகந்தம் உயிர்க்குமெல் லுயிர்ப்பெதிரோடி (பாரத. குருகுல. 91).8. Rest, repose; இளைப்பாறுகை.
நின் னுயவுநோய்க்குயிர்ப்பாகி (கலித். 35). 9. State of being undone,helplessness when deprived of power or energy;செயலறவு. கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ(தொல்.
பொ 260).
உயிர்ப்பு
uyirppu
n. உயிர்-. A measureof time; ஒரு கால அளவு. கணம்வளி யுயிர்ப்புத்தோவம் (மேருமந். 94).