நடுக்கம்
naṭukkam
n. நடுங்கு-. 1. [K.naḍuka, M. naṭukkam.] Trembling, shaking,quaking, shivering; நடுங்குகை. மின்னையுற்றநடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு. 220). 2.Agitation, trepidation, great fear;
மிக்க அச்சம் நள்ளிர விடையுறும் நடுக்க நீங்கலார் (கம்பரா. மாரீச.120). 3. Distress;
துன்பம் நாட்பட்டலைந்த நடுக்கமெலாந்
தீர (தாயு. பராபர. 260). 4. Dizziness,giddiness; கிருகிருப்பு. (யாழ். அக.)