நன்று
naṉṟu
n. நன்-மை. 1. That whichis good, goodness;
நல்லது அங்கிது நன்றிது நன்றெனு
மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8).(சூடா.) 2. Excellence;
சிறப்பு 3. Greatness,largeness;
பெரிது (தொல்.
சொல் 343.) 4. Virtue,merit;
அறம் நட்டார் குறை முடியார் நன்றாற்றார்(குறள், 908). 5. Happiness, felicity;
இன்பம் நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள், 328).6. Good deed;
நல்வினை சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34). 7. Benefit;
உபகாரம் தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி, 327). 8. Prosperity; வாழ்வினாக்கம். நன்றாங்கா னல்லவாக் காண்பவர் (குறள், 379). 9. Heaven;
சுவர்க்கம் வாள்வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே
காண் (கலித்.149). 10. Expr. signifying approval; அங்கீகாரக்குறிப்பு. நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932).