அங்கணம்
[This definition is from a user.]
2 x2 kitchen sink at floorlevel
சமையலறையின் ஓர் மூலையில் இரண்டு அடி சதுர அளவில் பள்ளமாக, துளையுடன் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால். திருநெல்வேலி மாவட்டத்தில் 'அங்கணாக்குழி' என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. தனியாகக் குளியலறை இல்லாத வீடுகளில், இந்த அங்கணாக்குழிகளே பெண்களின் குளியலறை. காபி அல்லது டீ போட்டு முடித்தவுடன், காபித்தூள்-டீத்தூள் கழிவுகள் இந்த அங்கணாக் குழிகள் வழியாகவே சாக்கடையில் சங்கமிக்கும். காபி நன்றாக இல்லை என்றால், 'அங்கணாக் குழில கொட்டறத என் வயிற்றில கொட்டக் குடுத்திருக்க!" என்று கோபமுகம் காட்டுவான் கணவன்.
கேட்கும் சான்றாண்மையற்றத் தகுதியற்றவர்கள் முன்பு நல்ல அறிவார்ந்த கருத்துக்களை விதைப்பது அங்கணத்துக்குள் அமிழ்தத்தை ஊற்றுவதைப் போன்றது என்று வள்ளுவர் சொல்லும் திருக்குறள், சங்கத் தமிழ் வாழும் நாற்றங்காலாக நெல்லை மாவட்டத்தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்று.
அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொளல். - திருக்குறள் 720.
A floor level 2x2 kitchen sink at one corner of kitchen is called ANGANAM in houses. For houses without a bathroom, ANGANAM serves the BATHROOM functionality for women. The word ANGANAM is a 2200 years old Sangam era word that was used in Tirukkural 720, that is still in use by the people of Tirunelveli district of Tamilnadu.
Translation of Tirukkural 720:
Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.
Explanation: To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the Anganam ground.