அறுதி
aṟuti
அறு¹-. n. 1. End, close,termination;
முடிவு அறுதி யாகவின் றருஞ்சமர்முடித்தும் (பாரத. பதினெட். 46). 2. Finality, as ina sale. See
அறுதிக்கிரயம் அறுதியீ தென்றுகொண்டு(திருவாலவா. 46, 32). 3. Being unconditioned, asa lease; அறுதிக்குத்தகை. 4. Destruction;
நாசம் அறுதியிலரனே (சி.
சி 1, 35, சிவாக்.). 5. Non-existence;
இல்லாமை Colloq. 6. Limit;
வரையறை காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ(பாரத. உலூக. 16). 7. Possession, ownership,right;
உரிமை செம்மகள் கரியோற் கறுதி யாக(கல்லா. 17).--adv. Until;
வரை அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9).