நிறம்
niṟam
n. prob. நிறு-. 1. [M. niṟam.]Colour, complexion;
வர்ணம் நிறங்கொள் கண்டத்து
நின்மலன் (தேவா. 370, 4). 2. Dye, tincture;சாயம். 3. Quality, property, temper, nature;இயல்பு. வின்னிறவாணுதல் (திருக்கோ. 58). 4.[M. niṟam.] Light, lustre;
ஒளி (சூடா.) நிறப்பெரும்
படைக்கலம் (கம்பரா. தைல. 30). 5. Fame,reputation;
புகழ் இவனோடு சம்பந்திக்கை தரமன்றுநிறக்கேடாம் (ஈடு, 4, 9, 3). 6. cf.
திறம் Harmony in music;
இசை (ஈடு, 2, 6, 11.) 7.Bosom, breast;
மார்பு செற்றார் நிறம்பாய்ந்த கணை(கலித். 57). 8. Middle place; நடுவிடம். கடலிற்றிரைநிறஞ்சேர் மத்தின் (திருமந். 2313). 9. Vitalspot;
உயிர்நிலை (அக.
நி ). 10. Body;
சரீரம் மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்தி நின்றோன் (திருக்கோ. 58). 11. Skin;
தோல் புலிநிறக்
கவசம் (புறநா. 13, 2).