பழுது
paḻutu
n. prob. பாழ்-. 1. Unprofitableness; பயனின்மை. (தொல்.
சொல் 324.) 2.Defect, blemish, flaw, fault;
குற்றம் (திவா.)பழுதிறொல் புகழாள்பங்க (திருவாச. 28, 10). 3.Damage, injury, ruin;
சிதைவு இவை பழுதிலை(தேவா. 543, 2). 4. Anything tainted, rotten,putrid, marred; பதனழிந்தது. 5. The state ofbeing a corpse; பிணமாயிருக்குந்
தன்மை (சிலப். 19,66, அரும்.) 6. Lie;
பொய் (பிங்.) பழுதுரையாதவனுரைப்பான் (திருவாலவா. 39, 9). 7. Poverty;வறுமை. பழுதின்று (பொருந. 150). 8. Evil;தீங்கு. பழுதெண்ணு மந்திரியின் (குறள், 639). 9.Body;
உடம்பு பழுதொழிந் தெழுந்திருந்தான் (சிலப்.19, 66). 10. Moral evil, turpitude; ஒழுக்கக்கேடு.11. Place;
இடம் (அக.
நி ) 12. Fullness;நிறைவு. (அக.
நி )