திறம்
tiṟam
n. perh. id. 1. Constituents,component parts, necessary elements;
கூறுபாடு நிற்றிறஞ்சிறக்க (புறநா. 6). 2. [K. teṟa.] Kind,class, sort;
வகை முத்திற வுணர்வால் (தணிகைப்பு.நந்தியு. 120). 3. Party, side;
சார்பு ஒருதிற மொல்காத நேர்கோல் (கலித். 42). 4. (Mus.) A secondarymelody-type, pentatonic; ஐந்துசுரமுள்ள
இசை (சிலப். 4, 106,
உரை ) 5. Half;
பாதி (தைலவ.தைல.) 6. Way, path, manner;
வழி அறனொடுபுணர்ந்த திறனறி
செங்கோல் (பொருந. 230). 7.History;
வரலாறு ஆபுத்திரன்றிறம் (மணி. 12, 27).8. Family;
குலம் கருங்கண்ணி திறத்து வேறாக்கட்டுரை பயிற்றுகின்றான் (சீவக. 548). 9. Relations;
சுற்றம் புனைகடி மாலைமாதர் திறத்திதுமொழிந்துவிட்டார் (சீவக. 2071). 10. Body;
உடம்பு உயிர்திறம் பெயர்ப்பான்போல் (கலித். 100). 11.Garb, costume;
வேடம் தவத்திறம்
பூண்டு தருமங்கேட்டு (மணி.
பதி 93). 12. Doctrine;
கோட்பாடு சமயக்கணக்கர் தந்திறங்கேட்டதும் (மணி.
பதி 88).13. Quality, state, nature;
இயல்பு உன்றிறமறிந்தேன் (மணி. 4, 96). 14. Matter, affair,
திறம்
tiṟam
n. sthira. 1. Firmness,stability;
நிலைபேறு (பிங்.) 2. Strength, power;வலிமை. திறமிருக்கும் புயத்தில் (அரிச்.
பு நகர. 15).3. Ability, cleverness, dexterity;
சாமர்த்தியம் Colloq. 4. Goodness, excellence;
மேன்மை சோதி திறம்பாடி (திருவாச. 7, 14). 5. Chastity;கற்பு. தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும்(சிலப். மங்கல. 27). 6. Moral conduct; establishedorder;
ஒழுக்கம் திறத்துளி வாழ்துமென்பார்(ஆசாரக். 89). 7. Uprightness;
நேர்மை திறத்துழியன்றி வஞ்சித் தெய்துதல் (கம்பரா. மாரீச. 206).