கொள்கை
koḷkai
n. id. 1. Taking,accepting; பெறுகை. பலியிடிற்
கொள்கை பழுது(சைவச.
பொது 388). 2. Opinion, notion; principle; tenet, doctrine;
கோட்பாடு குடிப்பிறப்பாளர்தங் கொள்கையிற் குன்றார் (நாலடி, 141). 3.Observance, vow;
விரதம் தாவில்
கொள்கை (திருமுரு. 89). 4. Conformity to moral principles,good conduct;
ஒழுக்கம் குலந்தீது
கொள்கை யழிந்தக்கடை (நான்மணி. 94). 5. Event, happening;நிகழ்ச்சி. புகுந்த
கொள்கை யுடனுறைந் தறிந்தானென்ன (கம்பரா. முதற்போர். 132). 6. Quality,nature, build;
இயல்பு கொம்பி னின்று நுடங்குறுகொள்கையார் (கம்பரா.
கிளை 10). 7. Pride;செருக்கு. தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து(சிலப். 5, 145). 8. Liking, fondness, regard,attachment, intimacy;
நட்பு (
J.) 9. A kind ofvessel; பாத்திரவகை. (
I. M. P. Pd. 300.)