அச்சு
accu
n. அஞ்சு-. Fear;
அச்சம் நகை யச்சாக (பரிபா. 3, 33)
அச்சு
accu
n. [T. K. M. accu.] 1.Mould; கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த
உருவம் 2. Wire mould;
கம்பியச்சு கம்பி வாங்கு மச்செனலாயதால் (இரகு.
திக்கு 189). 3. Printing type;உருக்கெழுத்து. 4. Exact likeness; சரியொப்பு.கடைமாந்த ரச்சாய் (சேதுபு.
வேதா 16). 5. Sign,mark, print, stamp;
அடையாளம் பவளத் திருமார்பிலச்சிட்டவர்க்கு (ஏகாம்.
உலா 211). 6. Weaver'sreed instrument for pressing down the threadsof the woof; நெய்வோர் கருவிவகை. 7. Comb-likeframe in a loom through which the warpthreads are passed and by which they arepressed or battened together; நெய்வோர் கருவிவகை.
அச்சு
accu
* n. akṣa. 1. Axle; உருள்கோத்த
மரம் உருள்பெருந்தேர்க் கச்சாணியன்னா ருடைத்து (குறள், 667). 2. Axle-bolt. See
அஞ்சுருவாணி (பிங்.) 3. Central pin, or handle of a mill-stone;
ஏந்திரவச்சு 4. Support, basis;
ஆதாரம் செந்நாப் போதார் புனற்கூடற்
கச்சு (வள்ளுவமா. 21).5. Strength;
வலிமை வேந்தடர்த்த வச்சு (சீவக.2777). 6. Original form; மூலரூபம். சுரர்களாய்த்துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும் (சி.
சி 2, 42).7. Body;
உடம்பு அச்செடுத்திடு முயிர்கள் (கந்தபு.சூரனமை. 137). 8. Ridge in a field; செய்வரம்பு.அச்சுக் கட்டின
நிலம்
அச்சு
அச்சு
accu
n. ac. The letter a; அகரம்.(சம். அக. Ms.)
அச்சு
accu
n. Yuga, epoch; யுகம். (W.)
அச்சு
accu
n. akṣa. 1. Chariot; தேர்.அச்சாசுவங்களையு மாங்கடித்து (பாரதவெண். 812).2. A kind of coin; ஒருவகை நாணயம். இவ்வச்சுஇருபத்தைந்தும் (S. I. I. V, 148).