தகுதி
takuti
n. தகு-. 1. Fitness,meetness, suitability, appropriateness, adequacy, propriety;
பொருத்தம் மற்றதன் றகுதிகேளினி (புறநா. 18, 17). 2. (Gram.) See
தகுதிவழக்கு (தொல்.
சொல் 17.) 3. Nature, property;
குணம் (பிங்.) 4. Worthiness, excellence, greatness;
மேன்மை 5. Good conduct,morality;
நல்லொழுக்கம் (அக.
நி ) 6. Equity,justice, impartiality;
நடுவுநிலைமை தகுதி யெனவொன்று நன்றே (குறள், 111). 7. Forbearance,patience;
பொறுமை தாந்தந் தகுதியான் வென்றுவிடல் (குறள், 158). 8. Capacity, pecuniary ability;
சக்தி 9. Position, status;
நிலைமை தகுதிக்குத்தக்கபடி செய்தான். Loc. 10. Knowledge,learning, wisdom;
அறிவு (யாழ். அக.) 11. cf.தொகுதி. Multitude;
கூட்டம் அதிர்ந்தன வானவர்தகுதி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 21). 12. Occasion, time;
தடவை பலதகுதி அவனைத் தேடினேன்.Loc.