செயல் 
			                                   				 
                                                                                                          ceyal   
                                                                                                                                        				         n.  செய்-. 1. [M. ceyal.]Act, action, performance, work, operation;தொழில். கழலிணை கடந்தருளுஞ் 
செயலை (திருவாச.11, 17). 2. Acquisition, as of wealth; பொருள்தேடுகை. மலையிறந்து 
செயல் சூழ்ந்த 
பொருள் (கலித்.2). 3. Engraving; carving; setting work injewellery; இழைப்பட 
வேலை  வயிரச் செயல்தாலிமணிவடம் (
S. I. I. ii, 16). 4. Fine workmanship;வேலைப்பாடு. இந்தச் 
சங்கிலி செயலாக 
உள்ளது  Loc.5. Safeguard, protection, watch; 
காவல்  (பிங்.)(செயலைச் செற்ற பகைதெறுவான் (கம்பரா. வாலிவதை. 86). 6. Behaviour, conduct; 
ஒழுக்கம் (சூடா.) 7. Power, energy; 
வலிமை  இப்போதுஅவனுக்கு நடக்கச் செயலில்லை. 8. Influence;செல்வாக்கு. Colloq. 9. State, circumstance;நிலைமை. 
அவன் நல்ல செயலில் இருக்கிறான். 10.See செய்யல், 4. (அக. 
நி )