ஐ
ai
. Ninth letter and vowel of the Tamilalphabet, diphthong of aஉயிரெழுத்து
ஐ
ai
part. 1. Suff. of nouns formed fromverbs to express (a) that which does an action, asin
பறவை வினைமுதற்
பொருள் விகுதி: (b) thatwhich is acted upon, as in
தொடை செயப்படுபொருள் விகுதி: (c) the instrument, as in
பார்வை கருவிப்பொருல்
விகுதி (நன். 140,
உரை ) 2.Suff. of verbal nouns, as in
கொலை தொழிற்பெயர் விகுதி 3. Suff. of abstract nouns, as inதொல்லை;
பண்புப்பெயர் விகுதி (நன். 140,
உரை )4. Accusative case-ending; இரண்டாம்
வேற்றுமை யுருபு. (நன். 296.) 5. Ending of 2nd pers.sing. verb, as in சென்றனை;
முன்னிலை யொருமைவிகுதி. (நன். 140,
உரை ) 6. A euphonic augment,as in
பண்டைக்காலம் ஒரு சாரியை (நன். 185,
உரை )
ஐ
ai
n. 1. Wonder, astonishment:வியப்பு. ஐதே யம்ம யானே (தொல்.
சொல் 385,உரை). 2. Beauty;
அழகு (பிங்.) 3. Slenderness;
மென்மை ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13).4. Minuteness, subtleness;
நுண்மை அணுத்தருந்தன்மையி லையோன் (திருவாச. 3, 45). 5. Phlegm;கோழை. ஐயினான் மிடறடைப் புண்டு (தேவா. 812, 7).6. Bronchitis; கபவியாத. ஐம்முதற் பிணியினாலழுங்கி (பாரத. குருகுல. 22). 7. The fifth note ofthe gamut; இளியென்னும் ஐந்தாம் இசையின்எழுத்து. (திவா.) 8. Lord, master;
தலைவன் என்னைமுன் னில்லன்மின் (குறள், 771). 9. Husband;
கணவன் எனக்கு மாகா தென்னைக்கு முதவாது(குறுந். 27). 10. King;
அரசன் (சூடா.) 11.Guru, priest, teacher;
ஆசான் (அக.
நி ) 12.Father;
பிதா தன்னை சேவடித்
தாமரை (சீகாளத்.
பு நான்முக. 124). 13. A prepared arsenic; சவ்வீரபாஷாணம். (தைலவ. தைல.)
ஐ
ai
n. (சங். அக.) 1. cf. ஐயவி. Indianmustard; கடுகு. 2. Sugar; சர்க்கரை.